எனது கணவர் திருமணத்திற்குமுன்பு வெளிநாட்டில் கப்பல் துறைக்கு படித்து வேலையும் செய்து, திரும்பி வந்து விட்டார். வெளிநாட்டு வேலைக்கு தொடர்ந்து, ஓர் ஆண்டாக முயற்சி செய்தும் தோல்வி தான் கிடைத்தது. ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகி, மதுரை

உங்கள் கணவருக்கு கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். பூர்வபுண்ணியாதிபதி லக்னத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று குடும்பாதிபதியுடன் இணைந்து

உங்கள் கணவருக்கு கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். பூர்வபுண்ணியாதிபதி லக்னத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று குடும்பாதிபதியுடன் இணைந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்திலுள்ள குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். களத்திர நட்பு ஸ்தானாதிபதியும் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் யோகமும் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் சொந்த வீடு அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com