என் மகனுக்கு 38 வயது ஆகிறது. திருமணம் தள்ளிப்போகின்றது. எப்போது திருமணம் கைகூடும்? குணமான பெண் அமைவாரா? நிரந்தர வேலை கிடைக்குமா? நல்ல வேலை, திருமணம் அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர், சேலம்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கும்பராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் ஐந்தாம் வீட்டில் சூரியபகவானுடன் இணைந்து புத

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கும்பராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் ஐந்தாம் வீட்டில் சூரியபகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறார். ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானத்தில் நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுவதால் சூரியபகவானுக்கும் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கிறது. களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கியாதிபதியும் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமைந்திருக்கிறார்கள். தற்சமயம் பாக்கியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு, ஜூலை மாதத்திற்குள்படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com