என் மகன் பி.இ., படித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். வங்கிப்பணி கிடைக்குமா? தாத்தாவின் வீட்டுமனை பாகப்பிரிவினையாகி வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா? எப்போது திருமணம் நடைபெறும்?  - வாசகர், புதுக்கோட்டை

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் மூலதிரிகோணம் பெற்று

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் மூலதிரிகோணம் பெற்று சூரிய, குருபகவான்களுடன் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று, அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவானால் (சனிபகவான் கும்ப மூலதிரிகோண ராசியில் அமர்ந்திருக்கிறார்) பார்க்கப்படுகிறார். லாபாதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் சுய சாரத்தில் பலம் பெற்று அமர்ந்து லாப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும் அயன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் பாக்கியாதிபதியின் புக்தி நடக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அவர் படித்துள்ள துறையிலேயே வேலை கிடைக்கும். பூர்வீக இடம் கிடைத்து அந்த இடத்தில் வீடு கட்டும் யோகமும் உண்டாகும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். பிரதி தினமும் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com