என் வயது 32. நான் எம்.ஏ., பி.எட்., டி.டி.இ.டி முடித்துள்ளேன். அரசு வேலை கிடைக்குமா? என் மாமியார் வழி சொத்தில் சிக்கல் உள்ளது. அதில் தீர்வு கிடைக்குமா? கணவர் கூலி வேலை செய்து வருகிறார். குடும்பம் முன்னேற்றம் பெற என்ன செய்யலாம்? சொந்த வீடு எப்போது அமையும்?  - வாசகி, திருக்கோவிலூர்

உங்களுக்கு மீன லக்னம், மிதுன ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து

உங்களுக்கு மீன லக்னம், மிதுன ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சர்வீஸ் என்கிற உத்தியோக வீட்டையும் அதில் அமர்ந்திருக்கும் ஆட்சி பெற்றிருக்கும் ஆறாமதிபதியான சூரியபகவானையும் தன பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானையும் பார்வை செய்கிறார். இதனால் சிவராஜ யோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்களும் உண்டாகிறது. ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும்; ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டையும் பார்வை செய்கிறார். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்வது ஒருவகையில் தர்மகர்மாதிபதி யோகத்தை உண்டாக்குகிறது. பூர்வபுண்ணியாதிபதியான சந்திரபகவான் சுக ஸ்தானத்தில் பாக்கியாதிபதியின் சாரத்தில் (ஒரு திரிகோணாதிபதி ஒரு கேந்திர வீட்டில்) அமர்ந்திருப்பதால் உங்கள் இரண்டு குழந்தைகளும் வாழ்க்கையில் நல்ல நிலைமையை எட்டி விடுவார்கள். அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு வேலை இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் கிடைத்துவிடும். உங்கள் கணவர் வழி பூர்வீகச் சொத்தும் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கைவந்து சேர்ந்துவிடும். அதை விற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதோடு அந்த காலகட்டத்தில் சொந்த வீடு பாக்கியமும் உண்டு. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். குடும்ப எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com