Enable Javscript for better performance
என் வயது 41. இது வரை எத்தனையோ பெண் பார்த்தும் திருமணம் கைகூடி வரவில்லை. திருமணம் நடைபெற வாய்ப்பு உள்- Dinamani

சுடச்சுட

    

    என் வயது 41. இது வரை எத்தனையோ பெண் பார்த்தும் திருமணம் கைகூடி வரவில்லை. திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதா? சொந்தத்தில் அமையுமா? சுய தொழில் செய்யலாமா?  - சீனிவாசன், ஸ்ரீரங்கம்

    By DIN  |   Published on : 21st February 2020 11:59 AM  |   அ+அ அ-   |    |  

    உங்களுக்கு தனுசு லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். அஷ்டமம் மற்றும் மனோகாரகரான சந்திரபகவான் ராசியில் எட்டுக்கு எட்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று இருப்பது சிறப்பாகும். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதி உச்சம் பெற்று லாப ஸ்தானத்திலுள்ள செவ்வாய், சுக்கிர பகவான்களுக்குக் கேந்திரம் பெற்றிருப்பதும் சிறப்பு. மேலும் செவ்வாய், சுக்கிர பகவான்களின் பார்வை பூர்வ
     புண்ணிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. குருமங்கள யோகம், பௌர்ணமி யோகம், புதஆதித்ய யோகம் ஆகிய முக்கிய யோகங்கள் உள்ளன. களத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து தற்சமயம் தசையை நடத்துவதால் இந்த ஆண்டே சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் ஜாதகப்படி உங்கள் பெயர் பொருத்தமாகவே அமைகிறது. அதிர்ஷ்ட நிறம் பச்சை. பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai