எனது இரண்டு மகன்களின் படிப்பு, வேலை வாய்ப்பு எவ்வாறு இருக்கும்?  - சங்கர், எட்டயபுரம்

உங்கள் மூத்த மகனுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாமதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியில் உச்சம் அடைகிறார்

உங்கள் மூத்த மகனுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாமதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியில் உச்சம் அடைகிறார். தனம், வாக்கு, குடும்பம் மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து இருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியபகவானும் லாபாதிபதியான புதபகவானும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனி மற்றும் ராகுபகவானுடன் இணைந்து இருக்கிறார். கல்விகாரகரும் கல்வி ஸ்தானாதிபதியும் இணைந்து களத்திர ஸ்தானத்தில் இருக்கிறார்கள். குரு மங்கள யோகம், புதஆதித்ய யோகம் ஆகிய பலமான யோகங்கள் உள்ளன. அவருக்கு பிடித்தமான துறையில் கல்வி அமையும். ஆடிட்டிங், நிதி, சட்டம் போன்ற துறைகள் ஏற்றது. தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடப்பதால் அவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 உங்கள் இரண்டாம் மகனுக்கு கன்னி லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் உச்சம் பெற்றுள்ள சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார். புதஆதித்ய யோகம் எட்டாம் வீட்டில் ஏற்பட்டிருப்பது சிறப்பாகும். தனம் வாக்கு குடும்பம் மற்றும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பு. மேலும் லக்னத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானின் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாமிடங்களைப் பார்வை செய்கிறார். தற்சமயம் நடக்கும் சுக்கிரபகவானின் தசை இன்னும் 15 ஆண்டுகள் நடக்கும். இது யோக தசையாகும். பெற்றோருக்கும் இதனால் யோக பாக்கியங்கள் கூடும். கணினி சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபடுத்தலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com