Enable Javscript for better performance
எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? குழந்தைபேறு கிடைக்குமா? வேலையில் முன்னேற்றம் ஏற்படுமா? எனது தந்தை- Dinamani

சுடச்சுட

    

    எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? குழந்தைபேறு கிடைக்குமா? வேலையில் முன்னேற்றம் ஏற்படுமா? எனது தந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்தார். எனது ஜாதகத்தின் காரணமாக இவ்வாறு நடந்ததா? இதற்கு பரிகாரம் உண்டா?  -வாசகர், உடுமலை

    By DIN  |   Published on : 28th February 2020 11:30 AM  |   அ+அ அ-   |  

    உங்களுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான புதபகவான், பூர்வபுண்ணியம் மற்றும் அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ஆகிய இருவரும் லாப ஸ்தானத்தில் இணைந்து மகாலட்சுமி மகாவிஷ்ணு யோகத்தைப் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் திக் பலம் பெற்று, லக்னத்தில் அமர்ந்திருக்கும் களத்திர நட்பு தொழில் ஸ்தானாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையில் குருபகவானின் புக்தி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்கிறது. மற்றபடி உங்கள் தந்தை இறந்த காலகட்டம் உங்கள் ஜாதகத்திலும் குறிப்பிட்டுக் கூற வேண்டிய காலகட்டமாக உள்ளது என்று கூற வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் உங்களுக்கு திருமணம் கைகூடும். புத்திர பாக்கியத்திற்குக் குறைவு உண்டாகாது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai