நான் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வருகிறேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? பெற்றோர் உடல் நலம் எவ்வாறு இருக்கும்? எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்? அரசாங்க வேலை கிடைக்குமா?  -முருகேஸ், மதுரை

உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள குடும்ப ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள குடும்ப ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார்கள். சுக, பாக்கியாதிபதி லாப ஸ்தானத்தில் கேதுபகவானுடன் இணைந்திருக்கிறார். தைரிய ஸ்தானாதிபதி தைரிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சந்திரபகவானுடன் இணைந்து இருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றமர்ந்திருக்கிறார். புதஆதித்ய யோகம். சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. மொத்தத்தில் ஒரு வலுவான ஜாதகமாக அமைகிறது. தற்சமயம் சனிபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். பெற்றோர்களுக்கும் உடல்நலம் சீரடைந்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com