Enable Javscript for better performance
நான் பி.எஸ்.சி., மற்றும் நூலக அறிவியல் படித்துள்ளேன். மேற்படிப்பு யோகம் உண்டா? அரசு வேலை கிடைக்குமா?- Dinamani

சுடச்சுட

    

    நான் பி.எஸ்.சி., மற்றும் நூலக அறிவியல் படித்துள்ளேன். மேற்படிப்பு யோகம் உண்டா? அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? திருமணம் எப்போது நடக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? பிறந்த நேரம் குறிக்கவில்லை. பிறந்த நேரம் என்ன?  - வாசகர், தூத்துக்குடி

    By DIN  |   Published on : 10th January 2020 11:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு மிதுன லக்னம், மிதுன ராசி, விசாக நட்சத்திரம். நீங்கள் பிறந்த நேரம் காலை 10.00 மணி என்று வருகிறது. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் நட்பு வீடான மகர ராசியை அடைகிறார். "மறைந்த புதன் நிறைந்த மதி'; " நிறைந்த நிதி' என்பது ஜோதிட விதி. அதனால் நீங்கள் மேலும் படித்து சுலபமாக பட்டங்களைப் பெற்று விடுவீர்கள். தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் களத்திர, நட்பு ஸ்தானாதிபதியின் புக்தி நடக்க இருப்பதால் இந்த ஆண்டே சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai