என் மகனுக்கு 35 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர், குத்தாலம்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான், லக்னத்திலேயே ஆட்சி, மூலதிரிகோணம் பெற்று,

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான், லக்னத்திலேயே ஆட்சி, மூலதிரிகோணம் பெற்று, பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ஸ யோகத்தைப் பெற்று திக்பலமும் பெற்று அமர்ந்திருக்கிறார். அவருடன் தர்மகர்மாதிபதிபதிகளும் (புத ஆதித்யர்கள்) இணைந்திருக்கிறார்கள். சந்திரபகவானும் குருபகவானின் கேந்திரத்தில் இருப்பதால் கஜகேசரி யோகமும் உண்டாகிறது. ஆறு மற்றும் பதினொன்றாம் அதிபதியான சுக்கிரபகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜ யோகம் பெற்று கேதுபகவானுடன் இணைந்திருக்கிறார். ராகுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து அஷ்டலட்சுமி யோகத்தைப் பெறுகிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அந்நிய உறவில் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com