Enable Javscript for better performance
என் மகனுக்கு எப்போது நிரந்தர உத்தியோகம், திருமணம் இரண்டும் கைகூடும்? - வாசகி, கோபிசெட்டிபாளையம்- Dinamani

சுடச்சுட

    

    என் மகனுக்கு எப்போது நிரந்தர உத்தியோகம், திருமணம் இரண்டும் கைகூடும்? - வாசகி, கோபிசெட்டிபாளையம்

    By DIN  |   Published on : 17th January 2020 07:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    உங்கள் மகனுக்கு கடக லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னாதிபதியான சந்திரபகவான் அயன ஸ்தானாமான பன்னிரண்டாம் வீட்டில் பாக்கியாதிபதியான குருபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்ன கேந்திரத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதும் சிறப்பு. ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சனி, ராகுபகவான்களுடன் இணைந்திருக்கிறார். சுக, லாபாதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானத்திலேயே மூலதிரிகோணம், திக்பலம் பெற்று புதபகவானுடன் இணைந்திருப்பது மகாலட்சுமி மகாவிஷ்ணு யோகம் என்று பொருள்படும் யோகமாகும். புத, சுக்கிரபகவான்களின் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீது படிகிறது. களத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான், குருபகவானுடன் இணைந்திருந்தாலும் ராகுபகவான் இணைந்திருப்பது குறை. தற்சமயம் புதபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தர உத்தியோகம் கிடைக்கும். திருமணமும் கைகூடும். பிரதி புதன் கிழமைகளில் ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai