Enable Javscript for better performance
நான் என் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறேன். எப்பொழுது நான் என் கணவருடன் இணைந்து வாழ்வேன். ப- Dinamani

சுடச்சுட

    

    நான் என் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறேன். எப்பொழுது நான் என் கணவருடன் இணைந்து வாழ்வேன். பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகி, கோயம்புத்தூர்

    By DIN  |   Published on : 17th January 2020 07:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    உங்களுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் உச்சம் பெற்ற சுக்கிரபகவானுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சனிபகவானுடன் இணைந்திருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும்; அங்கு அமர்ந்திருக்கும் சூரிய, புத, ராகு பகவான்களின் மீதும்; ஏழாம் பார்வை பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய், சனிபகவான்களின் மீதும்; ஒன்பதாம் பார்வை களத்திர, நட்பு ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. தற்சமயம் குருபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செவ்வாய்பகவானின் புக்தி நடக்க இருப்பதால் உங்கள் கணவருடன் இணைந்து வாழ வழிபிறக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai