எனக்கு கல்வித்துறையில் பதவி உயர்வு எப்போது கிடைக்கும்? தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். என் எதிர்காலம், வரும் தசைகள் எவ்வாறு உள்ளது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், விழுப்புரம்

உங்களுக்கு கடக லக்னம், மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானமான மூன்றா


உங்களுக்கு கடக லக்னம், மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுயசாரத்தில் அமர்ந்து ஆறாம் வீட்டையும், பாக்கிய ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சனிபகவானையும் பார்வை செய்கிறார். ஆராம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில், திக்பலம் பெற்றுள்ள சுக்கிரபகவானுடன் இணைந்து ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் தொழில் ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் பலம் பெற்றுள்ள சனிபகவானையும் ஒன்பதாம் பார்வையாக அயன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் பலம் பெற்றுள்ள  சனிபகவானையும் அங்கு அமர்ந்திருக்கும் லக்னாதிபதியையும் பார்வை செய்கிறார். தற்சமயம் கேது மகா தசையில் குருபகவானின் புத்தி நடக்கிறது. அதனால் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் பதவி உயர்வு கிடைத்துவிடும். அதனால் சுக்கிர மகா தசையும் சீராகவே செல்லும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com