எனக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, ஒரு சிறுநீரகம் எடுக்கப்பட்டு, தற்சமயம் குணமடைந்து வருகிறேன். இந்த காலகட்டத்தில் என் வேலை போய் விட்டது. எனக்கு மறுபடியும் நல்ல வேலை எப்போது கிடைக்கும்? என் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகர், மதுரை

உங்களுக்கு மிதுன லக்னம், அசுவினி நட்சத்திரம், மேஷ ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் ஆறாம் வீட்டில் தைரிய ஸ்தானாதிபதியான சூரிய பகவான் மற்றும் கேதுபகவான்களுடன்


உங்களுக்கு மிதுன லக்னம், அசுவினி நட்சத்திரம், மேஷ ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் ஆறாம் வீட்டில் தைரிய ஸ்தானாதிபதியான சூரிய பகவான் மற்றும் கேதுபகவான்களுடன் இணைந்திருக்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதியான சந்திரபகவான் லாப ஸ்தானத்தில் குருபகவானுடன் இணைந்து குருசந்திர யோகத்தைப் பெற்று குருபகவானை பார்வை செய்கிறார். தைரிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய்பகவானையும் (குருமங்கள யோகம்) பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் மீதும் களத்திர ஸ்தானத்தின் மீதும் படிகிறது. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான  சுக்கிரபகவான் சுக ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று (நீச்சவர்கோத்தமம்) இருப்பது சிறப்பு. அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்று அமர்ந்திருக்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் உங்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைத்து விடும். படிப்படியாக பொருளாதாரத்தில் வளர்ச்சியும் உண்டாகிவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com