என் மகனுக்கு 34 வயதாகிறது. இன்னும் நல்ல வேலை கிடைக்கவில்லை. திருமணமும் அமையவில்லை. திருமணம் எப்போது கைகூடும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகர், பெருமாள்புரம்

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில்  சந்திர, சனி பகவான்களுடன்


உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில்  சந்திர, சனி பகவான்களுடன் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சூரியபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். பாக்கியாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். குருபகவானின் பார்வை லக்னம், தைரியம், பூர்வபுண்ணியம் ஆகிய மூன்று ராசிகளின் மீதும் படிகிறது. தற்சமயம் உச்சம் பெற்றிருக்கும் சனிபகவானின் தசையில் சுய புக்தி முடிந்து புதபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஓரளவு நல்ல வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மற்றொரு வேலை, உயர்ந்த வருமானத்துடன் கிடைக்கும். இந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். வருடமொருமுறை குலதெய்வத்தையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com