தமிழ்நாட்டிலேயே வரன் அமையும்

என் தம்பி மகன் கனடாவில் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறான். கல்யாணப் பேச்சை எடுத்தாலே பிடி கொடுத்துப் பேசமாட்டேன் என்கிறான். அவனுடைய எதிர்காலம் எப்படி உள்ளது?

என் தம்பி மகன் கனடாவில் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறான். கல்யாணப் பேச்சை எடுத்தாலே பிடி கொடுத்துப் பேசமாட்டேன் என்கிறான். அவனுடைய எதிர்காலம் எப்படி உள்ளது? அவனுக்குத் திருமணம் எப்போது கைகூடும்? மணப்பெண் கனடாவில் கிடைக்குமா? தமிழ்நாட்டில் கிடைக்குமா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

வாசகி, மோகனூர்.

உங்கள் சகோதரர் மகனுக்கு சிம்ம லக்னம் மீன ராசி ரேவதி நட்சத்திரம், லக்னாதிபதியான சூரிய பகவான் அஷ்ட ஸ்தானத்தில் அயன ஸ்தானாதிபதியான சந்திர பகவானுடன் (அமாவாசை யோகம்) உச்சம் பெற்றுள்ள தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிர பகவானுடனும், நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கும் புத பகவானுடனும் இணைந்திருக்கிறார்.

சந்திர பகவானுக்கு கேந்திரத்தில் சுக்கிர பகவான் உச்சம் பெற்றிருப்பதால், பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகம் உண்டாகிறது. புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது. பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஸ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவானுடன் இணைந்து குரு மங்கள யோகத்தைக் கொடுக்கிறார்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும் படிகிறது. லக்னத்தில் கேது பகவானும், களத்திர ஸ்தானத்தில் ராகு பகவானும் உள்ளது சர்ப்ப தோஷமாகும். மற்றபடி தற்சமயம் சூரிய பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி நடக்கத் தொடங்க உள்ளதால், இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த பெண் தமிழ்நாட்டில் இருந்து அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரச் சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com