படித்த பெண் அமையும்

நான் சிறிய வேலை செய்து வருகிறேன்; அதோடு விவசாயமும் செய்து வருகிறேன். இன்னும் திருமணமாகவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?


நான் சிறிய வேலை செய்து வருகிறேன்; அதோடு விவசாயமும் செய்து வருகிறேன். இன்னும் திருமணமாகவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

வாசகர்,  திருத்துறைப்பூண்டி.

உங்களுக்கு மீன லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குரு பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும், அங்கமர்த்திருக்கும் சூரிய பகவானையும் (சிவராஜயோகம்) சந்திரபகவானையும் (குருச் சந்திர யோகம்) மற்றும் அஷ்டம ஸ்தானாதிபதியான ஆட்சி பெற்றுள்ள சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார். 

குருபகவானின் ஏழாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை அயனஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும் படிகிறது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான், பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய் பகவானுக்கு நான்காம் வீட்டில் அதாவது கேந்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. 

சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி உச்ச மூலத் திரிகோண வீடான கன்னி ராசியை அடைகிறார். இதனால் களத்திர ஸ்தானதிபதி பலம் பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறார். 

லக்னத்தில் கேது பகவானும், ஏழாம் வீட்டில் ராகு பகவானும் இருப்பது சர்ப்ப தோஷத்தைக் கொடுக்கிறது. மற்றபடி தற்சமயம் சனி மஹா தசையில் ராகு பகவானின் புக்தி அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரையில் நடப்பதால் இந்த காலக் கட்டத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கை கூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com