என் மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். குடும்பத்தில் நிம்மதி இல்லை. மனைவியும் புரிந்து கொள்ள மாட்டேன் என்று இருக்கிறார். எப்போது இந்த நிலை மாறி குடும்பத்தில் சகஜ நிலை உண்டாகும்?
-வாசகர்.
உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம், ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கும் சனி பகவானுடன் இணைந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டிலேயே மூலத்திரிகோணம் பெற்று அமர்ந்து ஐந்தாம் பார்வையாக ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் புத பகவானையும், அஷ்டம ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.
பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் உச்சம் பெற்று, ஆட்சி பெற்றுள்ள களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிர பகவானுடனும் தொழில் ஸ்தானாதிபதியான சூரிய பகவானுடனும், ராகு பகவானுடனும் இணைந்திருக்கிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் விபரீத ராஜ யோகம் பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு வலுவான ஜாதகம் என்றே கூறவேண்டும். தற்சமயம் ராகு பகவானின் தசையில் சூரிய பகவானின் புக்தி இந்த ஆண்டு இறுதி வரை நடக்கும். சுக ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதாலும், குடும்பாதிபதி மூலத் திரிகோணம் பெற்றிருப்பதாலும் குடும்ப வாழ்க்கை சீராகவே அமையும். அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் குடும்பத்தில் நிம்மதி சூழும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க் கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.