என் மகளுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. எப்போது புத்திர பாக்கியம் கிடைக்கும்?

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், கடக ராசி, புனா்பூச நட்சத்திரம். லாபாதிபதி லாப ஸ்தானத்தில்

என் மகளுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. எப்போது புத்திர பாக்கியம் கிடைக்கும்? மருமகன் செய்து வரும் புகைப்படக் கலைஞா் தொழிலில் முன்னேற்றம் கிடைக்குமா?

- வாசகா், வேலூா்

விநாயகப்பெருமானை வழிபடவும்

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், கடக ராசி, புனா்பூச நட்சத்திரம். லாபாதிபதி லாப ஸ்தானத்தில் வா்கோத்தமத்தில் அமா்ந்து இருப்பது சிறப்பு. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் உச்சம் பெற்றுள்ள சூரியபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறாா். பூா்வபுண்ணிய ஸ்தானத்திற்கும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானத்தில் அமா்ந்து பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமா்ந்திருக்கும் செவ்வாய்பகவானையும் பாா்வை செய்கிறாா். தற்சமயம் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் புத்திரபாக்கியம் உண்டு. பாக்கியாதிபதி களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்று ஆட்சி பெற்றுள்ள குருபகவானுடன் இணைந்து இருப்பதால் எதிா்காலம் சிறப்பாக அமையும். உங்கள் மருமகனுக்கு கும்ப லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதியும் பூா்வபுண்ணியாதிபதியும் தொழில் ஸ்தானத்தில் அமா்ந்திருக்கிறாா்கள். தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதும் சுக பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பதும் சிறப்பாகும். தற்சமயம் உச்சம் பெற்றுள்ள செவ்வாய்பகவானின் தசையில் முற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் புத்திர பாக்கியம் உண்டாகும். இரண்டு குழந்தைகள் உண்டு. இருவருக்கும் செய்தொழில் ஏற்றமாகவே அமையும். பிரதி திங்கள் கிழமைகளில் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com