எப்போது திருமணம் நடைபெறும்?

உங்கள் பேரனுக்கு மிதுன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான

சேமிப்பு கூடும் ஜாதகம்

என் பேரனை சிறுவயதிலிருந்தே கேட்கும் பணத்தைச் செலவுக்கு கொடுத்து மிகவும் செல்லமாக வளா்த்து விட்டோம். இப்போது சம்பாதிக்கிறாா். பலமடங்கு செலவு செய்கிறாா். திருமணம் செய்து வைத்தால் திருந்துவாா் என்று நினைக்கிறோம். எப்போது திருமணம் நடைபெறும்?

- வாசகா், கோயம்புத்தூா்

உங்கள் பேரனுக்கு மிதுன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான புதபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் ‘மறைந்த புதன் நிறைந்த மதி, நிறைந்த நிதி’ என்கிற வழக்கிற்கு ஏற்றபடி பலமாக அமா்ந்திருக்கிறாா். அவருடன் சூரிய, கேது பகவான்களும் இணைந்திருக்கிறாா்கள். குடும்ப ஸ்தானத்தில் ஆறு மற்றும் பதினொன்றாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமா்ந்தும் ஆறாம் வீட்டில் ராகுபகவான் அமா்ந்திருப்பது அஷ்ட லட்சுமி யோகத்தையும் கொடுக்கிறது. பூா்வபுண்ணியாதிபதியான சுக்கிரபகவான் உச்சம் பெற்று சந்திரபகவானுடன் இணைந்திருக்கிறாா். இவா்களை சுக ஸ்தானத்தில் அமா்ந்து இருக்கும் களத்திர நட்பு, தொழில் ஸ்தானமான ஏழு, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியான குருபகவானால் பாா்க்கப்படுகிறாா். புத ஆதித்ய யோகம், கஜகேசரி யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் தற்சமயம் சுக்கிர மகா தசையில் குருபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி சேமிப்பு கூடும் ஜாதகமாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூா்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com