Enable Javscript for better performance
பொருத்தமான வரன்- Dinamani

சுடச்சுட

    

    பொருத்தமான வரன்

    By DIN  |   Published on : 15th May 2020 05:14 PM  |   அ+அ அ-   |    |  


    என் மகள் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கிறார். எப்போது பணி நிரந்தரமாகும்? திருமணம் எப்போது நடைபெறும்?

    - வாசகர், பட்டுக்கோட்டை

    உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் புதன், சந்திரன், சனி பகவான்களுடன் இணைந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்திற்கும் அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை தன் ஆட்சி வீடான பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானையும் (கஜகேசரி யோகம் ) செவ்வாய்பகவானையும் (குருமங்கள யோகம்) சனிபகவானையும் (தர்மகர்மாதிபதியோகம்) குருபகவானையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். 

    பூர்வபுண்ணியாதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்று சுக்கிர, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் நிரந்தர வேலை அமைந்து விடும். படித்த நல்ல வேலையில் உள்ள சமஅந்தஸ்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai