Enable Javscript for better performance
வளமாக எதிர்காலம்- Dinamani

சுடச்சுட

    

    வளமாக எதிர்காலம்

    By DIN  |   Published on : 15th May 2020 05:14 PM  |   அ+அ அ-   |    |  


    என் மகனுக்கு  திருமணம் எப்போது நடைபெறும்? எத்தகைய பெண் அமைவார்? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

    - வாசகி, கும்பகோணம்

    உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் அயன ஸ்தானத்தில் நீச்சம் பெற்று ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெற்றிருக்கும் பாக்கிய, அயன ஸ்தானாதிபதியான புதபகவானுடன் இணைந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். லாபாதிபதியான சூரியபகவானுடன் இணைந்திருப்பதால் புதாதித்ய யோகமும் உண்டாகிறது. மேலும் சந்திரகேந்திரத்தில்  உச்சம் பெற்றுள்ள புதபகவான் அமர்ந்திருப்பதால் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகமும் உண்டாகிறது. 

    சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பு. தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து ஐந்தாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும் ஏழாம் பார்வையாக நான்காம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் ராகுபகவானையும் ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீட்டையும்  அங்கமர்ந்திருக்கும் சந்திரபகவானையும் (குருசந்திரயோகம்) பார்வை செய்கிறார். 

    தற்சமயம் புதபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் தெற்கு தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். உத்தியோகத்தில் நல்ல நிலைமையை எட்டி விடுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai