Enable Javscript for better performance
வெளிநாட்டு யோகம்- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாட்டு யோகம்

    By DIN  |   Published on : 15th May 2020 05:15 PM  |   அ+அ அ-   |    |  


    என் மகளுக்கு 28 வயதாகிறது. மேலாண்மை படிப்பு படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கிறார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளை அமைவாரா? 

    - வாசகர், மும்பை

    உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னம் மற்றும் அயன ஸ்தானாதிபதியான சனிபகவான் அயன ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சூரிய, செவ்வாய், ராகு பகவான்களுடன் இணைந்து களத்திர ஸ்தானத்திலுள்ள குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். குருபகவானின் ஏழாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திரபகவானின் மீதும் (கஜகேசரி யோகம்) ஒன்பதாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. 

    சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்து சுக ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகள் நடக்கும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உள்ளது. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai