உடல் உபாதை தீரும்

என் மனைவிக்கு உடல் நலம் குறைந்து விட்டது. தற்சமயம் மருத்துவமனையில் சேர்க்கவும் பயமாக உள்ளது. எப்போது சரியாகும்? அவர் கஷ்டம் எப்போது தீரும்? கேது புக்தி நடப்பது குறையா? 


என் மனைவிக்கு உடல் நலம் குறைந்து விட்டது. தற்சமயம் மருத்துவமனையில் சேர்க்கவும் பயமாக உள்ளது. எப்போது சரியாகும்? அவர் கஷ்டம் எப்போது தீரும்? கேது புக்தி நடப்பது குறையா? 

- வாசகர்

உங்கள் மனைவிக்கு தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் ராகுபகவானுடன் இணைந்து கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்றமர்ந்து சந்திரமங்கள யோகத்தைப் பெறுகிறார். 

சந்திரபகவான் உடல் காரகராகி பூர்வபுண்ணியாதிபதியால் பார்க்கப்படுவதால் உடல்நலத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. தற்சமயம் செவ்வாய்பகவானின்தசையில் கேதுபகவானின் புக்தி இந்த மாதம் இறுதிவரை நடக்கும். கேதுபகவானை குருபகவான் பார்வை செய்வதால் உடல் உபாதை தானாகவே தீர்ந்துவிடும். பயப்பட எதுவும் இல்லை. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com