முதுகுவலி தீர்ந்துவிடும்

என் சகோதரி மகள் ஒரு சிறு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயதில் கால்பந்து விளையாடும் போது பந்து முதுகில் அடித்ததில் கீழே விழுந்தாள்.

என் சகோதரி மகள் ஒரு சிறு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயதில் கால்பந்து விளையாடும் போது பந்து முதுகில் அடித்ததில் கீழே விழுந்தாள். பல வருடங்களுக்குப் பிறகு தற்சமயம் முதுகில் வலி வந்துள்ளது. இது எப்பொழுது குணமாகும்? அவரது திருமணம் எப்பொழுது நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

வாசகர், ஆந்திர மாநிலம்.

உங்கள் சகோதரி மகளுக்கு துலாம் லக்னம், கடக ராசி, புனர்பூச நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்திலேயே வர்கோத்தமம் பெற்றமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் கடைசி வரை ஒரு நல்ல வேலையில் அமரும் யோகம் உண்டு. 

லக்னத்தில் லாபாதிபதி நீச்சம் பெற்று வர்கோத்தமத்தில் இருப்பது நீச்சபங்க ராஜயோகமாகும். அவருடன் பாக்கியாதிபதி புத பகவான் அமர்ந்திருப்பது சிறப்பான புத ஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறது. லக்னாதிபதி சுக்கிர பகவான் குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். 

சுக, பூர்வ புண்ணியாதிபதி சனி பகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றமர்ந்து சச மஹா யோகத்தைக் கொடுக்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சனி பகவானையும், ஏழாம் பார்வையாக தன் ஆட்சி வீடான மீன ராசியான ஆறாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும் பார்வை செய்கிறார். 

தனாதிபதி, களத்திராதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. தற்சமயம் புத பகவானின் தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். நல்ல வேலையும் கிடைக்கும். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு முதுகுவலி தீர்ந்துவிடும். ஹோமியோபதி முறையில் வைத்தியம் செய்யவும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com