அஷ்டலட்சுமி யோகம்!

நான் பணி ஓய்வு பெற்று விட்டேன். தற்சமயம் முதலீடு இல்லாமல் ஏதேனும் தொழில் செய்ய நினைக்கிறேன். ஜோதிடம் படித்து ஜோதிடம் பார்க்கலாமா?

நான் பணி ஓய்வு பெற்று விட்டேன். தற்சமயம் முதலீடு இல்லாமல் ஏதேனும் தொழில் செய்ய நினைக்கிறேன். ஜோதிடம் படித்து ஜோதிடம் பார்க்கலாமா? அல்லது திருமண தகவல் மையம் ஆரம்பிக்கலாமா? வேறு என்ன தொழில் செய்யலாம்?

-செல்வராஜ், நெமிலி.

உங்களுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னாதிபதி சூரிய பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும், ஏழாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும் அங்கு வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கும் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான உச்சம் பெற்றுள்ள சனி பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. சுக பாக்கியாதிபதியான செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் வர்கோத்தமத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ள புத பகவானுடன் இணைந்திருக்கிறார். 

அயன ஸ்தானாதிபதியான சந்திர பகவான் சுக ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்திருப்பதால் அஷ்டலட்சுமி யோகம் உண்டாகிறது. 
தற்சமயம் ராகு மஹா தசையில் சனி புக்தி நடப்பதால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு நீங்கள் கூறியுள்ள தொழில்களில் ஈடுபடலாம். அதோடு உணவு சம்பந்தப்பட்ட துறைகளும் ஏற்றது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com