சொத்து கை விட்டுப் போகாது!

எனது ஒரு சிறிய தவறான முடிவால் என் சொத்து என் சகோதரியின் பெயருக்குச் சென்று விட்டது. எப்பொழுது மறுபடியும் என் பெயருக்கு வரும்?


எனது ஒரு சிறிய தவறான முடிவால் என் சொத்து என் சகோதரியின் பெயருக்குச் சென்று விட்டது. எப்பொழுது மறுபடியும் என் பெயருக்கு வரும்? 

-வாசகர், சிவகங்கை. 

உங்களுக்கு மீன லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். 

லக்னம், தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்றமர்ந்திருப்பது சிறப்பாகும். லக்னாதிபதியின் பலத்தால் அனைத்து பிரச்னைகளிலிருந்தும் விடுபடும் சக்தி உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜ யோகம்) புத பகவான்களையும், ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக லக்னத்தையும் பார்வை செய்கிறார். 

பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திர பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் தன பாக்கியாதிபதியான செவ்வாய் பகவானுடன் இணைந்திருக்கிறார். தைரிய அஷ்டமாதிபதியான சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் மூலத் திரிகோணம் பெற்று உச்சம் பெற்றுள்ள லாப விரயாதிபதியான சனி பகவானுடன் இணைந்திருக்கிறார். 

ஒன்பதாம் வீட்டில் சூரியபகவான் இருப்பதால் பூர்வீகச் சொத்துகள் கை விட்டுப் போகாது. பூமி காரகரான செவ்வாய் பகவான் (பாக்கியாதிபதி) பூர்வ புண்ணியாதிபதியுடன் இணைந்து இருப்பதால் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. அதனால் இன்னும் ஓராண்டுக்குள் சொத்தில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து சொத்தும் உங்கள் பெயருக்கு வந்துவிடும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com