முகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்
என் இரண்டாம் மகன் தனியார் கல்லூரியில் பொருளாதாரத் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எப்பொழுது திருமணம் நடக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
By DIN | Published On : 10th December 2021 07:44 PM | Last Updated : 10th December 2021 07:44 PM | அ+அ அ- |

என் இரண்டாம் மகன் தனியார் கல்லூரியில் பொருளாதாரத் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எப்பொழுது திருமணம் நடக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
-வாசகி, சென்னை.
உங்கள் இரண்டாம் மகனுக்கு கும்ப லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். லக்னம், பன்னிரண்டாம் வீடுகளுக்கு அதிபதியான சனி பகவான் லாபஸ்தானத்தில் அமர்ந்து, பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக பாக்கியாதிபதியான சுக்கிர பகவானைப் பார்வை செய்கிறார்.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்குமதிபதியான புத பகவான் எட்டாம் வீட்டிலேயே ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்றமர்ந்திருப்பது சிறப்பு. களத்திர நட்பு ஸ்தானாதிபதி சூரிய பகவான் களத்திர நட்பு ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பாகும்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்குமதிபதியான குரு பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக எட்டாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் புத பகவானையும், ஏழாம் பார்வையாக பத்தாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சனி பகவானின் தசையில் கேது புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.