எனக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளில் விவாகரத்து ஆகிவிட்டது. மறுமணம் செய்ய பெற்றோர் வரன் பார்க்கின்றனர். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையுமா? குழந்தை பாக்கியம் உண்டா? அரசு வேலை கிடைக்குமா?
By DIN | Published On : 21st May 2021 04:28 PM | Last Updated : 21st May 2021 04:28 PM | அ+அ அ- |

மறுமணம் கைகூடும்!
எனக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளில் விவாகரத்து ஆகிவிட்டது. மறுமணம் செய்ய பெற்றோர் வரன் பார்க்கின்றனர். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையுமா? குழந்தை பாக்கியம் உண்டா? அரசு வேலை கிடைக்குமா?
வாசகி, அரூர்.
உங்களுக்கு கடக லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புத்திர பாக்கியம் உண்டு.
பாக்கியாதிபதி குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று சுய சாரத்தில் அமர்ந்து தனாதிபதியான சூரிய (சிவராஜயோகம்) பகவானுடன் இணைந்து இருப்பது சிறப்பு.
களத்திர நட்பு ஸ்தானத்திற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் களத்திர நட்பு ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று, சசமகா யோகத்தையும் பெற்று ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். இதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து ஜாதகத்தைச் சேர்க்க வேண்டும். மற்றபடி பயப்படும் படி எதுவும் இல்லை.
தற்சமயம் களத்திர நட்பு ஸ்தானாதிபதியின் தசையில் பிற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மறு மணம் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டு. அரசு வேலையும் கிடைக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.