Enable Javscript for better performance
என் இரண்டாம் மகனுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை. இவர்களுக்கு எப்பொழுது க- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    என் இரண்டாம் மகனுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை. இவர்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? தத்து எடுத்துக் கொள்ளலாமா?

    By DIN  |   Published On : 29th October 2021 06:59 PM  |   Last Updated : 29th October 2021 06:59 PM  |  அ+அ அ-  |  

    என் இரண்டாம் மகனுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை. இவர்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? தத்து எடுத்துக் கொள்ளலாமா?

    -தியாகு, சேலம்.

     உங்கள் இரண்டாம் மகனுக்கு கடக லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி சந்திர பகவான் சுக ஸ்தானத்தில் திக் பலம் பெற்று பாக்கியாதிபதியான குரு (குரு சந்திர யோகம்) பகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. 
    புத்திர காரகர் லக்னாதிபதியுடன் இணைந்திருப்பதும் சிறப்பாகும். புத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்தில் சனி பகவானுடன் இணைந்திருப்பது குறை. குரு பகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் மீதும், ஏழாம் பார்வை கர்ம ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும் படிகிறது. 
    தற்சமயம் சனி பகவானின் தசையில் சுய புக்தி முடிந்து, ஆறாம் வீட்டில் சூரிய, கேது பகவான்களுடன் இணைந்திருக்கும் புத பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. உங்கள் மருமகளுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். 
    லக்னாதிபதி, ஆறாமதிபதி செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் நான்காம் வீட்டில் சுய சாரத்திலமர்ந்து, ஐந்தாம் பார்வையாக எட்டாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் பித்ரு காரகரான சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், ஏழாம் பார்வையாக கர்ம ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும், ஒன்பதாம் பார்வையாக அயன ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும் பார்வை செய்கிறார். 
    அவருக்கு தற்சமயம் சுப பலம் பெற்ற சுக்கிர பகவானின் தசையில் லக்னத்திலமர்ந்திருக்கும் சனி பகவானின் புக்தி நடப்பதால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மழலை பாக்கியம் உண்டாகும். ஆகையால், தத்து எடுக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp