எனது திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.  எப்பொழுது திருமணம் நடக்கும்? உணவு சம்பந்தமான  தொழிலில் ஈடுபட்டுள்ளேன்.  இது எனக்கு ஏற்றதா?  ஆயுள், ஆரோக்கியம் பற்றியும் கூறவும்..! 

-செந்தில்குமார், மயிலாடுதுறை.

உங்களுக்கு மீன லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னாதிபதி, கர்மாதிபதி குரு பகவான் தைரிய ஸ்தானத்திலமர்ந்து, ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். சுக, களத்திர ஸ்தானாதிபதி புத பகவான், சுக்கிர பகவானுடன் கர்ம ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்.  தற்சமயம்  அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும்  ராகு பகவானின் தசையில் சுய புக்தி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் நடந்தேறும். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும்.  நீங்கள் ஈடுபட்டுள்ள உணவு சம்பந்தப்பட்ட துறை உங்களுக்கு ஏற்றதாகவே அமைகிறது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப் பெருமானையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com