என் மகனின் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? ஒரு பெண்ணின் ஜாதகம் வந்துள்ளது... திருமணப் பொருத்தம் உள்ளதா என்று பார்த்துக் கூறவும்..!

என் மகனின் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? ஒரு பெண்ணின் ஜாதகம் வந்துள்ளது... திருமணப் பொருத்தம் உள்ளதா என்று பார்த்துக் கூறவும்..!

என் மகனின் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? ஒரு பெண்ணின் ஜாதகம் வந்துள்ளது... திருமணப் பொருத்தம் உள்ளதா என்று பார்த்துக் கூறவும்..!

-வேணுகோபால், சேலம்.

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் நான்காம் பாதம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் லக்னத்தில் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் பெற்று நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். 
பூர்வ புண்ணியாதிபதி, ருணம், ரோகம் சத்ரு ஸ்தானாதிபதி சனி பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமானஇரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் (பதினொன்றாமதிபதியான சந்திர பகவானுடன் பரிவர்த்தனை பெற்று) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 
நீச்சன் உச்சம் பெறும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று சந்திர கேந்திரத்தில் இருப்பதால் செவ்வாய் பகவானுக்கு நீச்ச பங்க ராஜயோகமுண்டாகிறது. 
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிலமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 
லாபாதிபதி சந்திர பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். சந்திர கேந்திரத்தில் சனி பகவான் உச்சம் பெற்றிருப்பதால் பஞ்சமஹா புருஷயோகங்களிலொன்றான சச மஹா யோகத்தைப் பெறுகிறார். 
அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் பன்னிரண்டாம் வீட்டிலேயே ஆட்சி பெற்று நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
கேது பகவான் மூன்றாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். ராகு பகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ராகு கேது பகவான்களுக்குள் அனைத்து கிரகங்களும் அடங்கி உள்ளதால் "கால சர்ப்ப யோகம்' உண்டாகிறது. இதை "அனுலோம கால சர்ப்ப யோகம்' என்பார்கள்.
அவருக்கு திருமணப் பொருத்தத்திற்கு வந்திருக்கும் வதுவுக்கு (பெண்ணுக்கு) மிதுன லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் ஒன்றாம் பாதம். 
லக்னாதிபதி, சுக ஸ்தானாதிபதி புத பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் (பெண்களுக்கு அஷ்டம ஸ்தானம் மாங்கல்ய ஸ்தானமுமாகும்) தைரிய ஸ்தானாதிபதி சூரிய பகவானுடனும், அஷ்டம பாக்கியாதிபதி ஆட்சி பெற்றுள்ள சனி பகவானுடனும் (சந்திர கேந்திரத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் சச மஹாயோகம்), ராகு பகவானுடனும் இணைந்திருக்கிறார். 
பூர்வ புண்ணிய புத்திர புத்தி 
ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்குமதிபதியான சுக்கிர பகவான் பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். 
ஆறு, பதினொன்றாமதிபதி செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
 ஏழு, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் உச்சமடைந்து சந்திர கேந்திரத்திலிருப்பதால் கஜ கேசரி யோகத்தையும், பஞ்சமஹா புருஷ யோகங்களிலொன்றான ஹம்ஸ யோகத்தையும் பெறுகிறார். 
இதனால் இருவருக்கும் சமதோஷம் உண்டாவதால் ஏக நட்சத்திர பொருத்தத்தில் "சுவாதி' நட்சத்திரம் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஜாதகப் பொருத்தம் நன்றாக இருப்பதால் (விதிவிலக்கு உண்டாகி விடுவதால்) சேர்க்கலாம். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.
(குறிப்பு: பொதுவாக, திருமணப் பொருத்தம் பற்றிய கேள்விகளுக்கு, குறித்த நேரத்தில் பதிலளிக்க இயலாது என்ற காரணத்தால் பதிலளிப்பது வழக்கமில்லை. "பொருந்தாத ஏக நட்சத்திரமாக இருந்தாலும், ஜாதகப் பொருத்தமிருப்பதால் விதி விலக்காக இதைச் சேர்க்கலாம்' என்பதாலும், அனைவருக்கும் பயன்படும் என்பதாலும் இதற்கு பதில் அளித்திருக்
கிறோம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com