பி.இ. பட்டதாரியான நான் காது கேளாண்மை குறையில் உள்ளேன்.  வேலைவாய்ப்பும், திருமணமும் எப்போது அமையும்? எதிர்காலம் சிறக்குமா?

பி.இ. பட்டதாரியான நான் காது கேளாண்மை குறையில் உள்ளேன்.  வேலைவாய்ப்பும், திருமணமும் எப்போது அமையும்? எதிர்காலம் சிறக்குமா?

-சிவசங்கரன், மயிலாடுதுறை.

உங்களுக்கு கும்ப லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னாதிபதி சனி பகவான் லக்னத்தில் மூலதிரிகோணம் பெற்றும், பஞ்ச மஹா புருஷ யோகமான சச மஹா யோகத்தையும் பெற்றும் இருப்பது சிறப்பு. பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிர பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. 
தனாதிபதி, லாபாதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் உச்சம் பெற்றுள்ள சந்திர பகவானையும்  ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் புத பகவானையும் ஒன்பதாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தையும் அங்கு நீச்ச பங்க ராஜ யோகம் பெற்றிருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவான் மீதும் படிகிறது. 
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டுக்கு அதிபதியான சூரிய பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்று நவாம்சத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அவருடன் சந்திர, கேது பகவான்களும் இணைந்து இருக்கிறார்கள். 
தற்சயம் சந்திர பகவான் தசையில் புத பகவான் புக்தி நடப்பதால், இந்த ஆண்டே அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜூலைக்குப் பின்னர் திருமணம் நடைபெறும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com