கண் பார்வை பாதிப்புக்குக் காரணமாகும் ஜாதக அமைப்பு -  ஜோதிட சூட்சமம்

கடவுள் கொடுத்த அனைத்து உறுப்புகளும் நமக்கு முக்கியமே! அதிலும் ஒளியை தரக்கூடிய கண் மிகவும் முக்கியமானது. நம்முடைய உணர்வுகளை
கண் பார்வை பாதிப்புக்குக் காரணமாகும் ஜாதக அமைப்பு -  ஜோதிட சூட்சமம்
கண் பார்வை பாதிப்புக்குக் காரணமாகும் ஜாதக அமைப்பு -  ஜோதிட சூட்சமம்

கடவுள் கொடுத்த அனைத்து உறுப்புகளும் நமக்கு முக்கியமே! அதிலும் ஒளியை தரக்கூடிய கண் மிகவும் முக்கியமானது. நம்முடைய உணர்வுகளை சோகமோ, அழுகையோ, காதலோ, ஆனந்தமோ, ஏக்கமோ அனைத்து உணர்வுகளையும் ஒன்று இணைத்து வெளிப்படுவது நம் கோலவிழி கண்களில் வெளிப்படும். நம்முடைய பாரம்பரிய ஜோதிடத்தில் கண்ணோலி என்று சொல்லப்படும் சூரியன், சந்திரன், சுக்கிரன் முக்கிய கிரகங்கள் பங்கு வகிக்கின்றன. இரண்டாம் அதிபதி நேத்திர நாதனாக அழைக்கப்படுவார். அதுதவிர முக்கிய தொடர்பு என்றால் 2, 12, பாவங்களை குறிக்கும். விழியிலுள்ள உள்ள பாதகங்களை வெளிப்படுத்தும் பாவங்களாக 3,6,8,12 பாவங்களாக அமையப்பெறும் என்பது ஜோதிட விதி.

இது தவிர கண் பாதிக்கும் ஏற்படுத்தும் ராசியாக சிம்மம் அல்லது கடகம் தொடர்புகளும் ஜோதிட நூல்களில் கூறப்படுகிறது.

கண்ணில் ஏற்படும் சிறு சிறு குறைகள், பிறவியிலே கண் வியாதியால் கண் பார்வை அற்ற தன்மை, ஒன்று அல்லது இரண்டு கண்களும் பாதிப்பு, மாலைக்கண் நோய் என்று பல்வேறு வியாதிகளின் தாக்கத்தை கூறப்படுகிறது. இவைகள் அனைத்து சித்தர்களின் குறிப்புகள் மற்றும் நம் பழம்பெரும் ஜோதிட நூள்கள் வாயிலாக விளக்கப்படுகிறது. நாம் இன்று பார்க்கப்போவது கண்ணில் ஏற்படும் நோய், குருட்டுத் தன்மை, மற்றும் கண்ணில் பல்வேறு பாதகங்கள் அவற்றோடு தொடர்பு கொண்ட பாவங்கள் மற்றும் அதற்குரிய கிரகங்களும் பாவங்களும் ஆகும். நூள்களில் கூறப்படும் அனைத்தும் பொதுப் பலன்களே. ஜோதிட சூட்சமத்தில் ராசி கட்டம், நவாம்சம், சஷ்டாம்சம் மற்றும் கிரக பலம் பலவீனம் ஆராய்ந்து அனுபவ பூர்வமாக பலன்களைக் கூற வேண்டும்.

பார்வையின் நோக்க தன்மை நூல்களில் கூறப்பட்ட குறிப்பு

இரண்டாமிடத்தில் சூரியனோ செவ்வாயோ அமர்ந்திருந்தால் அல்லது இரண்டாமிடத்து அதிபதியாக சூரியனும் செவ்வாயும் அமைந்தால் அந்த ஜாதகனுடைய பார்வை மேல்நோக்கி இருக்கும். இவற்றில் சந்திரனோ குருவோ சம்பந்தம் எனில் நேர் பார்வையாய் இருக்கும். புதனும் சுக்கிரனும் எனில் ஒரே பார்வையாய் இருக்கும். ராகுவும் சனியும் எனில் கீழ்நோக்கிய பார்வையாயிருக்கும்.

கண் பார்வை மற்றும் கண்ணில் ஏற்படும் நோயின் தாக்கம் பற்றி ஜோதிட சூட்சமம் என்ன சொல்லுகின்றன என்று பார்ப்போம்.

1. லக்னாதிபதி, 2க்கு உடையவன், சுக்கிரன் ஆகிய மூவரும் ஒரே பாவத்தில் இருப்பது என்பது கண் பிரச்னை கட்டாயம் உண்டாக்கும்.

நேத்ராதிபதி 12ல் மறையக் கூடாது. கண் சுத்தமாக தெரியாமல் போய்விடும். (எடுத்துக்காட்டு ஜாதகம்)

2. இரண்டுக்கு உடையவன் சந்திரனாக இருந்து சுக்கிரனோடு கூடி இரண்டாம் இடத்தில் அமர்ந்தால் அந்த ஜாதகன் இரவுப்பொழுதில் பார்வையற்றவன்.

3. ஐந்துக்குடையவனும், ஆறுக்குடையவனும் இணைந்து லக்னத்தில் வீற்றிருக்க, சுக்கிரன் இரண்டுக்குடையவனுடன் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகன் விழி - பகைவர்களால் அல்லது வேறு காரணங்களால் பறிக்கப்படும் என்பது நுள்களில் கூறப்பட்ட உண்மை.

4. இரண்டுக்குடையவன் பாவக் கிரகங்களில் ஒன்றாய் இருக்க, 8ம் இடத்தில் சனியுடன் சந்திரன் சேர்ந்திருக்க, 6ல் சூரியன் அமர்ந்திருக்க அந்த ஜாதகன் பூனை கண்களை உடையவானாக இருப்பான்.

5. இரண்டுக்குடையவன் பாவக்கிரகமாயிருந்து லக்கினதிபதியோடு இணைந்து 6,8,12ம் இடங்களில் ஒன்றில் நின்றிருந்தால் அந்த ஜாதகன் கருவில் இருக்கும்பொழுதே பார்வையற்றவனாகி விடுவான் என்கிறது ஜாதக அலங்கார மூலம் கீழே உள்ள பாடல் வரிகள் கூறப்படுகிறது.


இந்த ஜாதகருக்கு லக்கினாதிபதி நேத்ராதிபதி தன்னுடைய சுய சாரத்தில் 12ல் அமர்வது தன்னுடைய ஒரு கண்ணை இழக்க நேரிட்டது. இவற்றில் மூன்றாம் மற்றும் அஷ்டமாதிபதி செவ்வாய் 12ல் இருந்து, இந்த கூட்டமைப்பை சனியின் பார்வை உறுப்புகளில் ஒன்றை பிறவியிலேயே இழக்க நேரிடும். சுக்கிரன், கேது, புதன் தங்களுடைய சுய சாரத்தில் இருப்பது நல்ல நிலை இல்லை. கண்ணில் சுருக்கம் ஏற்படுத்த கேது துணை கொண்டு மற்ற கிரகங்கள் தொடர்புடன் நடைபெற்றது. இவை அனைத்தும் வெறும் ராசிக்கட்டத்தில் உள்ள சிறு விளக்கம். இன்னும் இவற்றில் ஆராய்ந்தால் கர்மவினைக்குரிய கிரகம், அவற்றின் அளவும் தெரியும்.

வியாதியின் தாக்கம்
1. சூரியனும் சந்திரனும் பன்னிரண்டாம் இடத்தில் நின்றிருந்தால் கண்களில் நோய் வரும். (மேலே உள்ள எடுத்துக்காட்டு ஜாதகம்)

2. லக்னாதிபதியை சனி பார்வையிட்டால் கண்ணில் வியாதி. சனியும் செவ்வாயும் சேர்ந்து இரண்டாம் அல்லது 12ம் இடத்திலோ நின்று இருந்தால் கண்ணில் குறைபாடு நேரும். இவற்றில் தொடர்பு பார்வையும் எடுத்துக்கொள்ளலாம். (எடுத்துக்காட்டு ஜாதகம்)

3. இரண்டாமிடத்தில் செவ்வாய் நின்றிருக்க, எட்டுக்குடையவன் 1,4,7,10 என்னும் கேந்திர ஸ்தானங்களில் எதாவது ஒன்றில் அமர, எட்டாமிடத்தில் பாவக்கிரகங்கள் வீற்றிருந்தால் விழியில் வியாதி ஏற்படும்.

4. சுக்கிரன், லக்கினாதிபதி, சந்திரன் ஆகிய மூவரும் இணைந்து 6,8,12ம் இடங்களில் பலமற்று அமர்ந்திருந்தால், அந்த ஜாதகன் மாலைக்கண் வியாதி உடையவன்.

5. லக்னாதிபதியோடு 2க்கு உடையவனும் சுக்கிரனும் கூடி இருக்க லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் சந்திரன் நின்றிருந்தால் அந்த ஜாதகன் மாலைக்கண் நோய் கொண்டவன்.

6. இரண்டுக்கு உடையவனும் சூரியனும் இணைந்து இருக்க இவர்களை சனியும்  மாந்தியும் பார்வையிட்டால் நேத்திரத்தில் நோய் உண்டாகும்.

7. இரண்டுக்குடையவன் சுக்கிரனாய் இருந்து லக்னாதிபதியோடு இணைந்து மூன்றாம் இடத்தில் நின்றிருந்தால் அந்த ஜாதகன் கண் வியாதிக்காரன்.

8. இரண்டாம் இடத்தில் சிம்ம ராசியாக இருந்து, சூரியனும் சுக்கிரனும் இணைந்து அந்த சிம்மராசியில் வீற்றிருக்க அவர்களோடு வேறு கிரகங்கள் சேர்ந்தால், அந்த கிரகம் எந்த ஸ்தானாதிபதியோ அந்த ஸ்தானம் குறிப்பிடுகின்ற உறவுக்காரருக்கோ அல்லது அந்த கிரகங்களில் யார் காரகத்துவம் பெற்றிருக்கிறதோ அந்த உறவுக்காரருக்கு கண் வியாதி ஏற்படும்.

9. சூரியன், சந்திரன், சனி ஆகிய மூவரும் இணைந்து 2 6 8 12 ஸ்தானங்களில் ஏதாவது ஒன்று நின்று இருந்தால் கண்ணில் பெரும் வியாதி தோன்றும்.

10. இரண்டாம் இடத்திலோ, 12ம் இடத்திலோ சந்திரனும் சூரியனும் இணைந்திருந்தாலும், 8-ஆம் இடத்தையும் 2-ஆம் இடத்தையும் பாவகிரகங்கள் ஆக்கிரமித்து இருந்தாலும் விழியில் வியாதி உண்டாகும்.

11. வலக் கண்ணைப் பற்றி சூரியன் அல்லது இரண்டாமிடத்தை கொண்டும், இடதுக் கண்களைப் பற்றி சந்திரன் அல்லது 12-ஆம் இடத்தை கொண்டும், பாதிப்பு இரு கண்ணிலா , வலது அல்லது இடது கண்ணிலா என்று பலன்களை ஆராய்ந்து கூறமுடியும்.

12. சூரியன் பாவ கிரகங்களோடு இணைந்து பலவீனப்பட்டு 12ம் இடத்தில் நின்று இருந்தால் அந்த ஜாதகனுடைய வலது கண் பார்வை பறிபோகும். பன்னிரெண்டாம் இடத்தில் செவ்வாய் பலவீனப்பட்டு நின்று இருந்தால் இடது கண் பார்வை இல்லாது போகும். சூரியன், செவ்வாய் ஆகிய இருவரும் 12-ஆம் இடத்தில் கூடி பலவீனப்பட்டு நின்றிருந்தால் இரு விழிகளில் பார்வை கெட்டுப்போகும். 

கண் பார்வை பிரச்னை தீர மருத்துவ ஆலோசனையுடன், அதற்குரிய கடவுளின் அனுக்கிரகமும் தேவை.

கண் பார்வைக்காக வழிப்படும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பரிகார ஸ்தலங்கள்.

1. ஸ்ரீ கண்ணாயிரநாதர், திருக்காரவாசல், திருவாரூர்
2. நேத்ரபுரீஸ்வரர், கிணார், மதுராந்தகம்
3. கோலவில்லி ராமர், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்.
4. சமயபுரம் மாரியம்மன், திருச்சி மாவட்டம்.
5. இருள்நீக்கியம்பாள், திருக்கச்சூர்.
6. மயிலையில் வீற்றிக்கு கோலவிழி மற்றும் முண்டகக் கண்ணியமன் கோவில்கள்.
7. இருக்கன்குடி மாரியம்மன், விருதுநகர்
8. பனங்காட்டீஸ்வரர் கோவில், பனையபுரம், விழுப்புரம் மாவட்டம்.
9. திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்.
10. மயிலையில் வீற்றிக்கு வெள்ளீஸ்வரர் கோவில்.
11. சூரியன், சந்திரன், மற்றும் சுக்கிரனுக்குரிய கிரக ஸ்தலங்கள்.

இதுதவிர சூரியன் வழிபட்ட, அவரின் விஷேச பார்வைபட்ட ஸ்தலங்கள்.

குருவே சரணம்!

ஜோதிட சிரோன்மணி தேவி
Whatsapp message: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com