

ஜோதிடம் ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது. அதில் கூறப்படாத தகவல்கள் இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஜாதகமும் ராசி சக்கரம் போல் மொத்தம் 16 வகை சக்கரங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் D -16 எனும் ஷோடச சக்கரம். இதனை தற்போது வரும் அனைத்து மென்பொருள் மூலமாகவும் ஒருவர் தமது பிறப்பு குறிப்புகளாக பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் மற்றும் பிறந்த ஊர் போன்றவற்றை அந்த மென்பொருள் கேட்கும் பகுதிகளில் உள்ளிடும்போது மேற்படி தகவல்கள் உடன் சோதாம்சம் எனும் சக்கரம் வெளிப்படும்.
இதுவும் ராசி சக்கரம் போலவே இருக்கும். ஆனால் இதில் அனைத்து 9 கிரகங்களும் இருப்பினும் ராகு, கேது ஒரே கட்டத்தில் இருப்பது மட்டுமே விசேஷம் ஆகும். இந்த கட்டத்துக்கு ஏற்ப கீழ் வரும் 12 ராசி கட்டத்தில் பல்வேறு வண்ணங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது கவனிக்கவும்.
மேற்படி சோதாம்சம் கட்டத்தில் எந்த ராசி கட்டத்தில் ராகு, கேது ஒன்றாக இணைந்து வருகிறதோ அதற்கேற்ப வரும் வண்ணத்தை ஆடை, வண்டி, வாகனத்திற்கு அளிக்காமல், சுக்கிரன் வரும் கட்டத்திற்கு ஏற்ப வரும் வண்ணத்தை பயன்படுத்துதல் மிக சிறப்பாக இருக்கும்.
ஏதாவது 1000ல் ஒரு நபருக்கு சுக்கிரனும், ராகு, கேதுவும் ஒரே ராசி கட்டத்தில் வரும் போது அதற்கேற்ப வரும் வண்ணத்தை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. இதில் மிக முக்கியமான ஒன்று யாதெனில், சுக்கிரனுக்கு - செவ்வாய் மற்றும் ராகு / கேது தொடர்பு இருப்பின் அந்த ஜாதகர் அதிகமாக வாகன விபத்துக்கு உள்ளாவார், கவனம் அவசியம்.
சுக்கிரன் நிற்கும் ராசிக்கு நிகராக வரும் வண்ணத்தை ஆடைகளை, ஒருவர் நேர்முக தேர்வு, போட்டி தேர்வுக்கு செல்லும்பொது அணிந்து செல்லும் போது நிச்சயம் வெற்றி பெறுவார் என்பது உறுதி. அதேசமயம் ராகு கேது நிற்கும் ராசிக்கு ஏற்ப வரும் வண்ணத்தை அணிந்து செல்வதால் தடை, தோல்வி போன்றவை ஏற்படுவதைக் கண்கூடாக காணலாம்.
அனைவரும் சுக்கிரன் நின்ற ராசிக்கேற்ப வரும் வண்ணத்தை அணிவதை விடுத்து வேறு வண்ணங்களை அணிந்தாலும் பிரச்னை இல்லை ஆனால், ராகு, கேது நிற்கும் ராசிக்கேற்ப வரும் வண்ணங்களை நிச்சயம் தவிர்த்தல் நல்லது.
"ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல...பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்."
தொடர்புக்கு : 98407 17857 / 91502 75369
இதையும் படிக்க: லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் உள்ள கிரகங்களும் பலன்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.