எண் ஜோதிடம்

ஒருவர் பிறந்த தேதியை ஒற்றையாக்கினால், அது பிறந்த எண்ணாகும். பிறந்த தேதி, மாதம், வருட எண்களைக் கூட்டி ஒற்றையாக்கினால் அது கூட்டு எண். உதாரணமாக, 18-ம் தேதி ஒருவர் பிறந்திருந்தால் அவருடைய பிறந்த எண் 9. எப்படியெனில் 1+8=9. மாதம் 8, ஆண்டு 1946 எனில் (8+1+9+4+6) 28 வரும். அத்துடன், தேதி 18-யும் கூட்டினால், (28+18) 46 வரும். ஆக, கூட்டு எண் 1.

இந்த மாத பலன்கள்

ஜனவரி மாத எண்கணித பலன்கள் - 7

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மற்றவர்களிடம் கொடுத்தவாக்கை கண்டிப்பாக காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எதிர்பாராத பணதேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. குடும்பத்தில் எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. 

பெண்கள் எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம். கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு தேவையான வசதிகள் கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். 

பரிகாரம்: மாரியம்மனை சனிகிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.