Enable Javscript for better performance
இன்டெலி-ஹைபிரிட் நுட்பத்துடன் வெளிவரும் மஹேந்திரா ஸ்கார்பியோ- Dinamani

சுடச்சுட

    

    இன்டெலி-ஹைபிரிட் நுட்பத்துடன் வெளிவரும் மஹேந்திரா ஸ்கார்பியோ

    By DIN  |   Published on : 13th September 2016 06:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mahindra_scorpio

    இந்திய கார் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா, தனது பிரசித்திபெற்ற ஸ்கார்பியோ மாடலில் இன்டெலி-ஹைபிரிட் நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்கார்பியோவின் 2.2 லிட்டர் எம்ஹாக் இன்ஜினுடைய அனைத்து வேரியன்ட்களிலும் இந்த நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நுட்பம் பொருத்தப்படுவதன் மூலம் எரிபொருள் பயன்பாடு 7 சதவீகிதம் வரை குறையும் என தெரிவித்துள்ளது அந்நிறுவனம். இன்டெலி-ஹைபிரிட் நுட்பத்தில் காரின் இன்ஜின், வாகனம் நிலையிலிருக்கும்போது தானாகவே அணைந்து பின்னர் தேவைப்படும் நேரத்தில் இயங்கும். மேலும், காரின் வேகப்படுத்தலுக்கு எலக்ட்ரிக் பவர் உபயோகமாகும். பிரேக் ஆற்றலை சேமித்து திரும்பப் பயன்படுத்தும் பிரேக் ரீஜெனரேட்டிவ் ஆப்ஷனும் இருப்பது இதன் சிறப்பம்சம்.

    ஸ்கார்பியோவின் S4, S4+, S4+ 4WD, S6+, S8, S10 2WD & S10 4WD ஆகிய அனைத்து வேரியன்ட்களிலும் இந்த நுட்பத்துடனான கார் வெளிவருகிறது. துவக்க நிலை மாடலான S2வில் மட்டும் இந்த நுட்பம் கிடைக்காது. எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதன் மூலம், சுத்தமான, பசுமையான உலகை உருவாக்கும் முயற்சியில் மஹேந்திரா நிறுவனமும் பங்குகொள்கிறது என தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இன்டெலி-ஹைபிரிட்டுடனான ஸ்கார்பியோ ரூ. 9.28 லட்சத்திலிருந்து ரூ. 14.01 லட்சம் வரைக்கும் (எக்ஸ்-ஷோரூம் மும்பை) கிடைக்கும்.

    Credits: Mahindra Scorpio
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai