Enable Javscript for better performance
புதிய உத்திகளுடன், சரிவிலிருந்து மீள திட்டமிடும் மஹிந்திரா- Dinamani

சுடச்சுட

    

    புதிய உத்திகளுடன், சரிவிலிருந்து மீள திட்டமிடும் மஹிந்திரா

    By DIN  |   Published on : 13th September 2016 06:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mahindra

    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் இருசக்கர வாகனப் பிரிவின் விற்பனை கடும் சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த வருடம் 12.7 சதவீதம் விற்பனை சரிவைச் சந்தித்த இந்நிறுவனம், இந்த வருடத்தின் ஏப்ரல்-மே மாதங்களின் விற்பனை கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தின் விற்பனையைவிட 38 சதவீதம் வரை சரிவைச் சந்தித்திருக்கிறது.  ஸ்கூட்டர் பிரிவில் 19.24 சதவீதமும், மோட்டார் சைக்கிள் பிரிவில் 60.72 சதவீதமும் விற்பனை சரிவை சந்தித்திருக்கிறது. இதன் விளைவாகப் புதிய உத்திகளுடன் முழுவேகத்தில் களமிறங்கி, சரிவிலிருந்து மீள திட்டமிட்டிருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.

    முதல்கட்டமாக தானாக முன்வந்து ஓய்வுபெறும் முறையில் தனது 250 ஊழியர்களை வெளியேற்றியிருக்கும் அந்நிறுவனம், தனது கவனத்தையும் பிரிமியம் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் பிரிவுகளில் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.  அடிப்படை மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களில் ஹீரோ கார்ப் மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் முழு ஆதிக்கத்தைச் செலுத்திவருகிறது. இந்த செக்மென்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா நிறுவன மாடல்களால், அவற்றுக்கு ஈடுகொடுத்து சந்தையைக் கைப்பற்ற இயலவில்லை.  பிரிமியம் மோட்டார் சைக்கிள்களில் மஹிந்திராவின் மோஜோவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 15 நகரங்களில் தற்போது விற்கப்பட்டு வரும் மோஜோ 200 முதல் 250 எண்ணிக்கையளவில் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகிவருகிறது. இதனை 500 வாகனங்கள் என்றளவில் அடுத்த 5 முதல் 6 மாதங்களில் உயர்த்த அந்நிறுவனம் திட்டமிடுகிறது.

    ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தளவில், பியூஜியட் நிறுவனத்தின் மாடல்களை இந்தியச் சந்தையில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது. சமீபத்தில்தான் மஹிந்திரா நிறுவனம் ஃபிரான்ஸை சார்ந்த 120 வருட பாரம்பரியமிக்க பியூஜியட் ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்கியது நினைவிருக்கலாம்.  பியூஜியட்டின் டான்ஜோ, ஸ்பீடுபைட், மெட்ரோபோலிஸ் ஆகிய மூன்று ஸ்கூட்டர்களை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

    Credits: Mahindra Bike
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai