எல்சிவி சந்தையில் களமிறங்கும் மாருதி நிறுவனம்

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தின், முதல் இலகுரக வணிக வாகனமான (எல்சிவி) , சூப்பர் கேரி பிக்கப் டிரக் ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்சிவி சந்தையில் களமிறங்கும் மாருதி நிறுவனம்

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தின், முதல் இலகுரக வணிக வாகனமான (எல்சிவி), சூப்பர் கேரி பிக்கப் டிரக் ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் கேரி பிக்கப் டிரக் 3800 மிமீ நீளமும், 1562 மிமீ அகலமும், 1868 மிமீ உயரமும் கொண்டது. 740 கிலோகிராம் வரையிலான எடையை இழுக்கும் திறன் கொண்டது. 793 சிசி , 2 சிலிண்டர்களை கொண்ட சூப்பர் கேரி பிக்கப் டிரக், அதிகபட்சமாக 32 பிஹெச்பி ஆற்றலையும், 75 என்எம் இழுவைத்திறனையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 22.07 கிமீ மைலேஜ் கொடுக்கும் சூப்பர் கேரி பிக்கப் டிரக், அதிகபட்சமாக 80 கிமீ வரை செல்லக்கூடியது.

ஸ்டீரியோ வாதி, ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ப்யூவல் மீட்டர், சார்ஜிங் சாக்கெட், டிஜிட்டல் கிளாக் போன்ற அம்சங்கள் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்கும் கொண்ட சூப்பர் கேரி எல்எஸ்பிவி என்னும் பிரேக்கிங் நுட்பத்தில் இயங்குகிறது

சூப்பர் வெள்ளை, சூப்பர் சில்வர் என இரு வண்ணங்களில் சூப்பர் கேரி பிக்கப் ட்ரக் வெளிவருகிறது. இதன் லூதியானா எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 4.01 லட்சம்.

துவக்கத்தில் கொல்கத்தா, அஹமதாபாத், லூதியானா உள்ளிட்ட மூன்று நகரங்களில் விற்பனை செய்யப்படும் இந்த டிரக்கின் விற்பனை படிப்படியாக நாட்டிலுள்ள பிற நகரங்களுக்கு விஸ்தரிப்பு செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com