23,157 கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா!

இந்தியாவிலிருந்து டெயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் 23,157 கார்களைத் திரும்பப் பெறுகிறது.
23,157 கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா!

இந்தியாவிலிருந்து டெயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் 23,157 கார்களைத் திரும்பப் பெறுகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:
காற்றுப் பைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலகெங்கிலிருந்தும் 29 லட்சம் கார்களை திரும்பப் பெற்று அவற்றை சரி செய்து தரும் பணிகளில் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் விற்பனை செய்த கொரோலா ஆல்டிஸ் வகையைச் சேர்ந்த 23,157 கார்களை திரும்பப் பெற்று அவற்றில் பொருத்தப்பட்ட காற்றுப் பைகளில் உள்ள கோளாறுகளை நிறுவனம் சரிசெய்து தர உள்ளது.
இந்த கார்கள் அனைத்தும் 2010 ஜனவரி - 2012 டிசம்பர் மாதங்களுக்கிடையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையான கொரோலா ஆக்சியோ மற்றும் ஆர்ஏவி4 கார்களில் பொருத்தப்பட்ட காற்றுப்பைகளில் ஏற்பட்ட கோளாறு சரி செய்து தரப்படும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
ஜப்பானைச் சேர்ந்த டகாட்டா கார்ப்பரேஷன், கார்களில் பாதுகாப்புக்காகப் பொருத்தப்படும் காற்றுப் பைகளைத் தயாரித்து பல முன்னணி நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் காற்றுப் பைகள், பி.எம்.டபிள்யூ., கிரைஸ்லர், டெய்ம்லர், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், ஹோண்டா, மாஸ்தா, மிட்ஸுபிஷி, நிஸான், சுபரு மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கார்களில் பொருத்தப்பட்டுள்ளன. காற்றுப்பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, ஒவ்வொரு கார் உற்பத்தி நிறுவனமும் அதன் தயாரிப்புகளைத் திரும்பப் பெறும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.
நடப்பு ஆண்டு ஜனவரியில் ஹோண்டா நிறுவனம், காற்றுப் பை கோளாறை சரிசெய்து தருவதற்காக இந்தியவில் விற்பனை செய்த அக்கார்டு, சிவிக், சிட்டி,மற்றும் ஜாஸ் வகையைச் சேர்ந்த 41,580 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com