நிஸானின் புதிய டெரானோ அறிமுகம்

ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய டெரானோ காரை புது தில்லி அருகே நொய்டாவில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
நிஸான் டெரானோ காரை நொய்டாவில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் கிலோம் சிகூர்ட்.
நிஸான் டெரானோ காரை நொய்டாவில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் கிலோம் சிகூர்ட்.

ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய டெரானோ காரை புது தில்லி அருகே நொய்டாவில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
நிஸான் இந்திய நிறுவனத்தின் தலைவர் கிலோம் சிகூர்ட் புதிய எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் எட்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்தோம். திட்டமிட்டபடி புதிய மாடல்களை ஒவ்வொன்றாக விற்பனைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். அதன்படி, இப்போது மேம்படுத்தப்பட்ட டெரானோ விற்பனைக்கு வருகிறது. மாடலுக்கு ஏற்ப ரூ. 9.99 லட்சம் முதல் ரூ. 13.6 லட்சம் வரை இவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் எஸ்.யு.வி. ரக பயணிகள் வாகனங்களில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம். உலகம் முழுவதும் அந்த வகையான எங்களது 'பெட்ரோல்', 'கஷகாய்', 'முரானோ' மாடல் கார்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இதற்கு அடுத்தபடியாகப் புதிய ஹைப்ரிட் மாடலான எக்ஸ்-டிரெயில் விற்பனைக்கு வரும். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆண்டு இறுதிக்குள் எக்ஸ்-டிரெயில் விற்பனை தொடங்கும். இந்த மாடல் காரை உலகில் சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யவிருக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு எந்த மாசும் ஏற்படுத்தாத அதிநவீன ரக மாடல் இது.
இவை தவிர, நிஸானின் டாட்ஸன் ரக காரில் மேம்பாடுகளுடன் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளோம். மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்போர்ட்ஸ் ரக ஹாட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தவிருக்கிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com