சுடச்சுட

  

  ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 அறிமுகம்

  By DIN  |   Published on : 21st November 2017 12:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  royal-enfield-continental-gt-650

  கோவாவில் நடைபெற்று வரும் ரைடர் மேனியா அரங்கில் கான்டினென்டினல் ஜிடி மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகிய இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.

  சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்யகி வரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம், கோவாவில் நடைபெற்று வரும் மேனியா 2017 அரங்கில் தனது கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகிய இரு மாடல்களை இந்தியாவுக்கு அறிமுகம் செய்துள்ளது.  கான்டினென்ட்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல் எஞ்சின் சிறப்பம்சமானது 'பேரலல்-ட்வின்' தொழில்நுட்பத்தில் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  எரிபொருள் இல்லாமல் 198 கிலோ கிராம் எடை கொண்டுள்ள கான்டினென்டல் ஜிடி 650 மாடலில் 12.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. 

  கிளாசிக் தோற்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இரு மோட்டார் சைக்கிள் மாடல்களும் அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சந்தைகளில் விற்பனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai