Enable Javscript for better performance
வெஸ்பா, ஏ ஃபெஸ்டிவ்: இலவச காப்புறுதி உட்பட ரூ.10 ஆயிரம் வரை சலுகை அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வெஸ்பா, ஏப்ரிலியா ஃபெஸ்டிவ்: இலவச காப்புறுதி உட்பட ரூ.10 ஆயிரம் வரை சலுகை அறிவிப்பு

    By DIN  |   Published on : 13th September 2018 06:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vespa

     

    வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள் சிறப்பு பிக் பெஸ்டிவ் சலுகையின் கீழ் 10,000 ரூபாய் மதிப்புள்ள சலுகைகளை வழங்குகிறது, ஐந்து ஆண்டு இலவசமாக கட்டாயமான காப்புறுதி மற்றும் உத்தரவாதத்தை உள்ளடக்குகிறது மேலும் பல சலுகைகளை வழங்குகிறது.

    சென்னை பியாஜியோ இந்தியா செப்டம்பர் முதல் அக்டோபர் வரை கவர்ச்சிகரமான பண்டிகை சலுகைகளை வழங்குகிறது. முதல் முறையாக பியாஜியோ  '5X பான் சலுகை' அதன் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா இரு சக்கர வாகனங்களின் வரம்புகளில் அறிமுகப்படுத்துகிறது.  இந்த தனித்துவமான சலுகை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு மூன்று விருப்பத் தேர்வை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் பியாஜியோவின் இரண்டு பிராண்டிற்கும் ரூபாய் 10,000  மற்றும் அதற்கு மேற்பட்ட சலுகைகளை பெறமுடியும்.

    வெஸ்பா ஸ்கூட்டர் வரம்பு எஸ்எக்ஸ்எல்  125, எஸ்எக்ஸ்எல் 150, விஎக்ஸ்எல் 125, விஎக்ஸ்எல் 150, எலெகான்ட் ஆகியவை மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட  நாட்டே இதன் விலை ரூபாய் 68,845 (எக்ஸ் ஷோரூம் புனே) மற்றும் ஏப்ரிலியா எஸ்ஆர் 125, எஸ்ஆர் 150 மற்றும் எஸ்ஆர் 150 ரேஸ் பண்டிகை பருவ விளம்பரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. '5X பான் சலுகை' 125 சிசி வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா மடல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான உத்தரவாதம் மற்றும் காப்பீட்டை உள்ளடக்குகிறது மற்றும் 150 சி.சி மாடல்களுக்கு சலுகைகளை வழங்குகிறது.

    இதன் '5X பான் சலுகை' கீழ், வாடிக்கையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச உத்தரவாதத்தை அனுபவிக்கலாம், இதில் இரண்டு ஆண்டுகளுக்கு நிலையான உத்தரவாதமும், மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் இதில் உள்ளடங்கியுள்ளன. கூடுதலாக, முதல் வருடம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சர்வீஸ் சேவையைப் பெற முடியும், இரண்டு ஆண்டுகளுக்கு 'ஆன் ரோடு உதவி' மற்றும் 5,000 ரூபாய் மதிப்புள்ள பேடிஎம் நன்மைகள் அல்லது ஸிரோ காஸ்ட் ஈ.எம்.ஐ அலல்து ரூபாய் 3,999-க்கன அளவில் குறைவான டவுன் பெமென்ட் போன்ற லாபகரமான கட்டண முறைகள் உள்ளன.

    இந்த சிறப்பு பண்டிகை சலுகை பற்றி பேசிய திரு. டீகோ க்ராபி, சிஇஓ மற்றும் எம்டி பியாஜியோ இந்தியா கூறியது "பியாஜியோ வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா வரம்பு ஸ்கூட்டர்களில் அதன் பிரதான உள்ளடக்கிய சலுகைகளுடன் பண்டிகை காலத்தை வரவேற்கிறது. நுகர்வோர் அவற்றின் ஸ்டைலான தோற்றம், உறுதியான வடிவமைப்பு மற்றும் இத்தாலிய நேர்த்தியுடன் இரு ப்ராண்டுகளையும் மதிப்பீடு செய்கின்றனர். எங்கள் தனித்துவமான பண்டிகை சலுகை இந்த திசையின் ஒரு படியாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது மற்றும் இது  வாடிக்கையாளர்களுக்கு உணர்ச்சிகரமான தேர்வுகளை வழங்கி கொண்டாடுகிறது"

    திரு ஆஷிஷ் யக்மி, தலைமை அதிகாரி - இரு சக்கர வாகன வணிகம் கூறியது, "நுகர்வோர் நம் மரபுகளை சொந்தமாக வைத்து வாழ்கையின் உயர்வு மற்றும் சுதந்திரத்தை கொண்டாட முடியும். எங்கள் '5X பான் சலுகை' என்பது ஒரு லாபகரமான தொகுப்பாக மட்டுமல்லாமல் உரிமையாளரின் செலவிற்கு ஒரு மதிப்பினை சேர்க்கிறது. அதோடு வாடிக்கையாளர்களுக்கு நிதி நன்மைகளையும் வழங்குகிறது. பியாஜியோ ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீட்டு செலவை ஏற்றுக்கொள்கிறது. மேலும் கூடுதலாக எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஐந்து ஆண்டு உத்தரவாதத்தை வழங்குகிறது. இது அதனை ஒருவகையான சிறந்த வாய்ப்பாக உருவாக்குகின்றது".

    மேலும் தொடர்புக்கு அனுகவும்:

    சந்தோஷ் மல்லையா

    9841638757

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai