ஹூண்டாயின் கோனா பேட்டரி எஸ்.யூ.விக்குப் போட்டியாக களமிறங்கும் எம்.ஜி மோட்டார்ஸ்

ஹூண்டாயின் கோனா பேட்டரி எஸ்.யூ.விக்குப் போட்டியாக இசட்.எஸ் எனப்படும் தனது புதிய ரக காரை எம்.ஜி மோட்டார்ஸ் களமிறங்கியுள்ளது.
எம்.ஜி - இசட்.எஸ் எஸ்.யூ.வி
எம்.ஜி - இசட்.எஸ் எஸ்.யூ.வி

சென்னை: ஹூண்டாயின் கோனா பேட்டரி எஸ்.யூ.விக்குப் போட்டியாக இசட்.எஸ் எனப்படும் தனது புதிய ரக காரை எம்.ஜி மோட்டார்ஸ் களமிறங்கியுள்ளது.

இந்தியாவின் முதல் பேட்டரி எஸ்.யூ.வியாக ஹூண்டாய் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கோனா காருக்கு போட்டியாக, எம்.ஜி நிறுவனம் இந்த வகை காரை முன்னிறுத்துகிறது. இந்திய சந்தையில் எம்.ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது காராகவும், பேட்டரி எஸ்.யூ.வி வகையில் அதன் முதலாவது அறிமுகமாகவும் இதுஅமைந்துள்ளது.

20 முதல் 25 லட்சமாக இதன் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் முதல்கட்டமாக தில்லி, மும்பை, ஹைதராபாத்,  அஹமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய சந்தைகளில் மட்டுமே இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக எம்.ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜீவ் சப்பா, 'ஏற்கனவே 10 சர்வதேச சந்தைகளில் வெற்றித்தடத்தை பதித்துள்ள இசட்.எஸ் கார் இந்திய சந்தையிலும் முத்திரை பாதிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்திய சாலை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தக் கார்  பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது ' என்று தெரிவித்துள்ளார்.

இந்த் கார் மிகச் சிறந்த சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது என்றும், காரை வாங்கும் போதே அதனுடன் போர்ட்டபிள் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும்  குறிப்பிட்ட இடங்களில் சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கியமாக ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டால் இந்த காரில் 340 கி.மீ பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனால் அதே நேரம் கோனா காரில் 452 கி.மீ பயணிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேநேரம் சார்ஜ் ஆகும் நேரம் உள்ளிட்டவற்றில் இரண்டும் சம அளவிலமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.  இதர சிறப்பம்சங்களுடன் இந்த வகைக் காரானது கோனாவிற்கு சந்தையில் சரியான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com