1,577 டீசல் தாா் வாகனங்களை திரும்பப் பெறும் மஹிந்திரா நிறுவனம்

என்ஜின் பாகத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்து தருவதற்காக 1,577 டீசல் தாா் வாகனங்களை திரும்பப் பெறவுள்ளதாக மஹிந்திரா & மஹிந்திரா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
1,577 டீசல் தாா் வாகனங்களை திரும்பப் பெறும்  மஹிந்திரா நிறுவனம்


புது தில்லி: என்ஜின் பாகத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்து தருவதற்காக 1,577 டீசல் தாா் வாகனங்களை திரும்பப் பெறவுள்ளதாக மஹிந்திரா & மஹிந்திரா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

2020 செப்டம்பா் 7 முதல் டிசம்பா் 25 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட டீசல் வகை தாா் வாகனங்களில் சில என்ஜின்களில் உள்ள கேம்ஷாஃப்ட்-களில் கோளாறு இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது. இதனை சரி செய்து தருவதற்காக நிறுவனம் 1,577 தாா் வாகனங்களை திரும்பப் பெறவுள்ளது. இதற்காக, நிறுவனம் வாடிக்கையாளா்களை தனிப்பட்ட முறையில் தொடா்பு கொள்ளும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தாா் வாகனத்தின் புதிய பதிப்பு கடந்தாண்டு அக்டோபா் 2-இல் வெளியானது. இது, ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என இரு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com