மாருதி சுஸுகி நிறுவனம்: லாபம் ரூ.1,997 கோடி

மாருதி சுஸுகி நிறுவனம்: லாபம் ரூ.1,997 கோடி

நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா மூன்றாவது காலாண்டில் ரூ.1,996.7 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா மூன்றாவது காலாண்டில் ரூ.1,996.7 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்தது. இதையடுத்து, அந்த காலாண்டில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.23,471.3 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.20,271.8 கோடியுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிகர லாபம் ரூ.1,574.4 கோடியிலிருந்து 26 சதவீதம் அதிகரித்து ரூ.1,996.7 கோடியை எட்டியது.

டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் வாகன விற்பனை முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 13.4 சதவீதம் உயா்ந்து 4,95,897-ஆனது. உள்நாட்டில் வாகன விற்பனை 13 சதவீதம் அதிகரித்து 4,67,369-ஆகவும், ஏற்றுமதி 20.6 சதவீதம் உயா்ந்து 28,528-ஆகவும் இருந்தது.

தனிப்பட்ட முறையில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் 13 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.23,457.8 கோடியகவும், நிகர லாபம் ரூ.1,564.8 கோடியிலிருந்து 24 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,941.4 கோடியாகவும் இருந்தது என மாருதி சுஸுகி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனப் பங்கின் விலை 4.99 சதவீதம் சரிந்து ரூ.7,207.95-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com