வாசகர்களுக்கு மட்டும் அல்ல; திரைப்பட ரசிகர்களுக்கும் தான்!

சென்னை புத்தகக் காட்சியில் புத்தக வாசகர்களுக்கு மட்டும் அல்ல;  திரைப்பட ரசிகர்களுக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள் உள்ளன.
குறும்படத் திரையிடல்
குறும்படத் திரையிடல்

சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் புத்தக வாசகர்களுக்கு மட்டும் அல்ல;  திரைப்பட ரசிகர்களுக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள் உள்ளன.

இதுதொடர்பாக சென்னை புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் கூறியுள்ளதாவது:

இந்தப் புத்தகக் காட்சியில் குறும்படம் மற்றும் சமூக நலன் சாா்ந்த ஆவணப்படங்களை திரையிட தனி அரங்கு, ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு பெறும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வார நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சி செயல்படும். நிறைவு நாள் நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கலந்துகொள்கிறாா்.

அண்மைக் காலமாக அச்சு புத்தகங்களின் விற்பனை குறைந்து வருகிறது. அதை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். சென்னையில் அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும் வகையில் நிரந்தர புத்தகப் பூங்கா ஒன்றை அமைக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட கால கோரிக்கை. அதனைச் செயல்படுத்த அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று பபாசி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com