பேச்சாளர்-சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்
லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு எனும் நாவலைப் படித்தேன். அது வீட்டு வேலைக்குச் சென்று அங்கிருந்த ஒருவனால் ஏமாற்றப்பட்டு விலைமாதாகிய பெண் குறித்த கதையாகும். அவளிடம் வந்த ஒருவர் கொலையுண்டதால், அப்பெண் சிறைக்குச் செல்கிறாள். அப்போது அவளை ஆரம்பத்தில் ஏமாற்றியவனே அவளுக்கு உதவி, சிறையிலிருந்து அவளை மீட்டு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறான். ஆனால், அப்பெண் அவனை ஏற்கவில்லை என்பதே அந்நாவலின் சுருக்கம். இரண்டாவதாக எனது வாழ்க்கையை மாற்றிய லூயி ஃபிஷர் என்ற அமெரிக்கர் எழுதிய காந்தியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலாகும். அதில் கூறப்பட்ட சம்பவங்களும், நிகழ்வுகளும் நான் அரசியலில் ஈடுபடுவதற்கான அடித்தளம் என்றே கூறலாம்.
மூன்றாவதாக, திருக்குறள் நூலாகும். அதை எத்தனை முறை, எவரது உரை வாயிலாகப் படித்தாலும் புதிய, புதிய விஷயங்களை நமக்கு கற்றுத் தருவதாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு இணையாக மகாபாரதத்தையும் நான் தேடிப்பிடித்து விரும்பிப் படித்துள்ளேன்.