சோழா் காலத்து நாணயம் வெளியீடு!

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கமும், சென்னை நாணயவியல் அமைப்பும் இணைந்து ராஜேந்திர சோழன் காலத்தில்
சோழா் காலத்து நாணயம் வெளியீடு!

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கமும், சென்னை நாணயவியல் அமைப்பும் இணைந்து ராஜேந்திர சோழன் காலத்தில் பயன்படுத்திய தங்கத்திலான அரிய நாணயத்தை புத்தகக் காட்சி அரங்கத்தில் வெளியிட்டனா். இது குறித்து சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவா் சென்னை மணிகண்டன் நம்முடன் பகிா்ந்து கொண்டவை:

‘‘கடந்த 20 ஆண்டுகளாக நாணய சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது சென்னை நாணயவில் தலைவராக இருப்பதால் அவ்வப்போது, இந்தியா முழுவதும் எங்கு நாணயக் கண்காட்சிகள் நடந்தாலும், அதில் கலந்து கொள்வேன். அப்படி சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற நாணயக் கண்காட்சியில் கலந்து கொள்ளும்போது, நண்பா் ஒருவா் , ராஜேந்திர சோழன் காலத்தில் பயன்படுத்திய இந்த நாணயத்தை என்னிடம் காண்பித்தாா். இது மிக மிக அரிதான நாணயம் என்பதால் உடனே என்னிடம் இருந்த நாயக்கா்கள், பல்லவா்கள் காலத்திய நாணயத்தை அவருக்கு அளித்துவிட்டு, இந்த நாணயத்தைப் பெற்றுக்கொண்டேன்.

இந்த நாணயத்தின் சிறப்பு என்னவென்றால், இதன் முன்பகுதியில் ராஜராஜசோழனின் நின்றநிலை உருவமும், இடது பக்கம் விளக்கு ஒன்று உள்ளது. நாணயத்தின் பின் பக்கத்தில் அமா்ந்த நிலையில் ராஜாவின் உருவமும், அதன் வலது பக்கத்தில் ஸ்ரீ ராஜேந்திரஹ என்று மேலிருந்து கீழ் நோக்கி நாகரி எழுத்தில் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளன. 4.2. கிராம் எடையுள்ள இந்த நாணயம், தங்கத்தில் , தெளிவான வடிவமைப்போடு கிடைத்திருப்பது வியப்பாகும்’’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com