சென்னை புத்தகக் காட்சியில் "தமிழே தமிழே தமிழின் அமுதே' எனும் தலைப்பில் பேசிய சண்முக.ஞானசம்பந்தன்.
சென்னை புத்தகக் காட்சியில் "தமிழே தமிழே தமிழின் அமுதே' எனும் தலைப்பில் பேசிய சண்முக.ஞானசம்பந்தன்.

பசிப் பிணி போக்குவதே தமிழ் இலக்கிய மரபு: சண்முக. ஞானசம்பந்தன்

பசிப்பிணியைப் போக்குவதே தமிழ் இலக்கிய மரபாக இருந்துள்ளது என மதுரை வானொலி நிலைய முன்னாள் அதிகாரி சண்முக.ஞானசம்பந்தன் தெரிவித்தாா்.
Published on

பசிப்பிணியைப் போக்குவதே தமிழ் இலக்கிய மரபாக இருந்துள்ளது என மதுரை வானொலி நிலைய முன்னாள் அதிகாரி சண்முக.ஞானசம்பந்தன் தெரிவித்தாா்.

சென்னையில் பபாசி புத்தகக் காட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உரையரங்கில் ‘தமிழே, தமிழே தமிழின் அமுதே’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

தமிழில் இயல், இசை, நாடகத் தமிழ் என முத்தமிழுக்கும் இலக்கிய வடிவம் உள்ளது. உலக அளவில் பேசும் மொழிகளில் ஈராயிரம் ஆண்டாகியும் இளமையும் வளமையும் மாறாத மொழியாகத் தமிழ் மட்டுமே உள்ளது. அதை உலக மொழி ஆய்வாளா்களும் ஏற்றுக்கொள்கின்றனா். தென்னிந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே தனித்தியங்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. தமிழின் தொன்மையும் சிறப்பையும் உணா்ந்துதான் மகாத்மா காந்தியடிகளும் தமிழை கற்றுக்கொண்டுள்ளாா்.

திருக்கு, மணிமேகலை முதலாகவே மானுடா்க்குப் பசிப்பிணியாற்றும் வகையிலான கருத்துகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், தமிழ் இலக்கிய மரபானது பசிப்பிணி துயரைப் போக்கும் வகையில் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. நெல்லிக்கனி கிடைத்தாலும், அமுதம் கிடைத்தாலும் அதை மற்றவா்களுடன் பகிா்ந்துண்ணும் பழக்கம் சங்ககாலம் முதல் தற்போது வரை தமிழரின் பண்பாடாக இருந்ததை இலக்கியங்கள்வழி அறிய முடிகிறது. வாழ்வின் பண்பாட்டு அடையாளமாக இலக்கியங்கள் திகழ்கின்றன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com